“வாரிசு” ரிலீஸ் பிரச்சனைக்கு நடிகர் சந்தானம் கொடுத்த பதில் என்ன தெரியுமா.? பரபரப்பு தகவல்..

0
santhanam-
santhanam-

காமெடி நடிகர் சந்தானம் சமீபகாலமாக ஹீரோவாக நடித்து அசதி வருகிறார் இவர் நடிப்பில் இப்பொழுது கூட உருவாகியுள்ள திரைப்படம் ஏஜென்ட் கண்ணாயிரம் இந்த படம் ஒரு தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் சந்தானம் ஒரு ஏஜென்டாக சூப்பராக நடித்திருக்கிறார். இந்தப் படத்தை மனோஜ் பீதா என்பவர் இயக்கிய தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது அதற்கு முன்பாக படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது இந்த சந்திப்பில் சந்தானம், நடிகை ரியா சுமன், இயக்குனர் மனோஜ் பீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய சந்தானம் இந்த படம் பற்றியும், மற்ற  சில விஷயங்களை வெளிப்படையாகவும் கூறி இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் கவுண்டர் வசனங்களை சேர்க்கத்தான் முயற்சித்ததாகவும் ஆனால் அதற்கு இயக்குனர் ஒத்துக் கொள்ளவில்லை என கூறினார். ஆனால் கதைக்கு என்ன தேவையோ அதை செய்திருப்பதாகவும் கூறினார். அந்த சமயத்தில் தெலுங்கு திரை உலகில் நேரடி படங்களுக்கு மட்டுமே பண்டிகை நாட்களில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

என்று அறிவிக்கப்பட்டிருக்கும் முடிவு பற்றி உங்கள் கருத்து என்னை என்ற கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த சந்தானம் தமிழ் நாட்டில் நம் படங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்போம் அது போல் தான் அந்தந்த மொழி படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் எந்த படம் நன்றாக இருக்கிறதோ அந்த படம் ஓடும் என்று தெரிவித்தார்.

நடிகர் விஜய்க்கு ஆந்திரா, தெலுங்கானாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருக்கிறது இந்த சமயத்தில் அவரது படம் வெளியாகினால் அங்கு முகவாசி திரையரங்கை வாரிசு படமே தட்டி தூக்கி விடும் இதனால் தெலுங்கு படங்கள் பாதிக்கப்படும் என நினைத்து தான் இந்த படத்தை வெளியிட தடுக்கிறார்கள் என பலரும் கூறுகின்றனர்.