அழகின் மூலம் நடிகர்களை சுத்த விட்ட நடிகை ஸ்ரீதேவியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

தமிழ் திரை உலகில் தனது பயணத்தை தொடர்ந்து பின் இந்திய சினிமா உலகம் முழுவதும் தனது திறமையை வெளிக்காட்டி லிஜெண்டரி நடிகையாக உருமாறியவர் நடிகை ஸ்ரீதேவி.

நடிகை ஸ்ரீ தேவி ஆள் பார்ப்பதற்கு செம வாட்டசாட்டமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தியதால் வாய்ப்புகள் இவருக்கு தமிழில் ஏராளமாக கூடின. இப்படி தமிழில் வெற்றியைக் குவித்த இவர் திடீரென இந்தி பக்கம் சென்று படங்களில் நடிக்க தொடங்கியதோடு மட்டுமல்லாமல் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் இருவருக்கும் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.

குடும்ப உறவுகளில் மகிழ்ச்சியாக இருந்த ஸ்ரீதேவி திடீரென நட்சத்திர ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இவரை தொடர்ந்து தற்போது இரு மகள்களும் சினிமாவையே பெரிதும் நம்பி கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவி இறக்கும் போது மட்டும் அவரது சொத்து மதிப்பு 250 கோடி  இருந்தது. மேலும் 3,4 பங்களா ஏராளமான கார்கள் என வாங்கி குவித்து வைத்திருந்த ஸ்ரீதேவி.

தமிழ் சினிமா உலகில் இதே காலகட்டத்தில் என்னதான் ஸ்ரீதேவி பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் ஹிந்தி பக்கம் போன பிறகுதான் அவருக்கு கோடிக்கணக்கில் சொத்து மதிப்பு அதிகமாக வந்தது என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறுகின்றனர். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை

 

Leave a Comment