அதிரடி மன்னன் ரோஹித் ஷர்மாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்.

இந்திய அணியில் பல வருடங்களாக அதிரடி காட்டி ரோஹித் சர்மா தற்பொழுது மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வருகிறார். அதிலும் குறிப்பாக குறைந்த ஓவர் போட்டிகளில் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பின்  திரடியை காட்டுவதில் கைதேர்ந்தவர் ரோகித் சர்மா இதுவரை பல்வேறு விதமான சாதனைகளை தன்வசப்படுத்தி உள்ளார்.

2007 T20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் மூலம் இந்திய அணிக்கு தேர்வான ரோஹித் சர்மா.  ஒருகட்டத்தில் 2013ம் ஆண்டில் தான் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்தார். நிலையான இடத்தை பிடிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது தோனி இவரின் திறமையை கண்டறிந்து இவருக்கு தொடங்க வீரராக வாய்ப்பைக் கொடுத்தார். அதை சரியாக பயன்படுத்தி சிறப்பாக வருகிறார்.

இந்திய அணியின் மிக சிறப்பாக வலம் வரும்போது ஷர்மா தற்போது பிசிசிஐ வருடத்திற்கு ஒருமுறை ஒப்பந்தத்தில் போட படும் அதில் தற்போது ரோகித் சர்மா A+ இருப்பதால் ஆண்டிற்கு வருமானமாக 7 கோடி தரப்படுகிறது அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ ஒவ்வொரு போட்டிக்கும் வீரர்களுக்கும் தனி ஊதியம் வழங்குகிறது. அந்தவகையில் ரோகித் சர்மா ஒரு டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம் ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும் T20 ஓவர் போட்டிக்கு 3 லட்சம் வாங்குகிறார்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் 5 முறை தட்டிச் சென்றுள்ளார் இவர் ஒவ்வொரு சீசனுக்கும் சுமார் 15 கோடி சம்பளமாக பெறுகிறார் என்பது கூடுதல் தகவல் ஒரு பக்கம் இருக்க விளம்பரங்களிலும் தற்பொழுது தலை காட்டி நடித்து வரும் ரோஹித் சர்மா பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது நடித்து வருகிறார் அந்த வகையில் இவருக்கு வருகின்ற வருமானம் சுமார் 7 கோடி.

rohit sharma
rohit sharma

இவர் தங்கியிருக்கும் பிரம்மாண்ட  வீட்டிலிருந்து பார்த்தால் அரபிக்கடலின் காட்சி மிகத் தெள்ளத் தெளிவாக இருக்கும். அந்த வீட்டின் சொத்து மதிப்பு சுமார் 30 கோடி என கூறப்படுகிறது. அப்படி பார்க்கையில் ரோகித் ஷர்மாவின் சொத்து மதிப்பு சுமார் 170 கூடியிருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்திய அணியில் அதிக ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்கள் ரோஹித் சர்மாவும் முதன்மையானவராக பார்க்கப்படுகிறார்.

அதனால் இன்னும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருடங்கள் ரோஹித் சர்மாவை இந்திய அணியில் விளையாடுவார்.

Leave a Comment