சிவாஜியின் பேரன் நடிகர் “விக்ரம் பிரபு” குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? சொன்ன ஷாக்காகவீங்க..

திரையுலகைப் பொறுத்தவரை வாரிசு நடிகர்களின் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது அந்த வகையில் நடிப்பிற்கு பெயர் போன நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு அடுத்ததாக அவரது மகன் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்று இப்போது நடித்து வருகிறார்.

அவரை தொடர்ந்து அவரது மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து தொடர்ந்து வெற்றிகளை குவித்த வண்ணமே இருக்கிறார். நடிகர் விக்ரம் பிரபு கும்கி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானர். முதல் படமே பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது அதன்பின் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது இருப்பினும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தினார்.

அந்தவகையில் சிகரம்தொடு, அரிமா நம்பி, துப்பாக்கி முனை போன்ற படங்கள் சுமாரான வெற்றியைப் பெற்று தந்தன அதன்பின் இவர்  நடித்த படங்கள்  சொல்லிக்கொள்ளும்படி வெற்றி பெறாமல் இருப்பதால் தற்போது வெற்றியைக் கொடுத்த போராடி வருகிறார். இருப்பினும் விக்ரம் பிரபுவின் கையில் ஓரிரு படங்கள் கைவசம் இருக்கின்றன.

அந்த வகையில் டாணக்காரன், பாயும் ஒளி நீ எனக்கு போன்ற இரண்டு படங்கள் மட்டுமே இருக்கின்றன. இந்த இரண்டு திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும்  பட்சத்தில் அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை  பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது அவரது ரசிகர்களின் ஆசையும் அதுதான்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி பார்வையில் நடிகர் விக்ரம் பிரபுவின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் 30 கோடி இருக்கும் என தகவல்கள் வெளிவருகின்றன.

Leave a Comment

Exit mobile version