சமுத்திரக்கனி நடித்த வெள்ளை யானை திரைப்படம் எந்த தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது தெரியுமா.? இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0

முன்பெல்லாம் இயக்குனர்கள் கேங்ஸ்டர் திரைப்படங்களை தான் இயக்கி வந்தார்கள் ஆனால் தற்போது பல இயக்குனர்களும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் அந்த வகையில் பார்த்தால் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு இயக்கும் அனைத்து திரைப்படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று விடுகிறது.

அந்த வகையில் இயக்குனர் சுப்ரமணிய சிவா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் வெள்ளை யானை இந்த திரைப்படத்தில் சரண்யா ரவி,யோகி பாபு போன்ற பல சினிமா பிரபலங்கள் நடித்து உள்ளார்கள் மேலும் இந்த திரைப்படமும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது பல திரைப்படங்கலும் நேரடியாக இணையதளம் வழியாக வெளியாகிறது.

ஆனால் இந்த திரைப்படம் நேரடியாக சன் டிவி தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது ஆம் வருகின்ற ஜூலை 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிறது என அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவந்துள்ளது.சமுத்திரக்கனி நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் மக்களை கவரும் வகையில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் இதில் சமுதிரக்கனி மற்றும் யோகி பாபு நடித்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நன்றாக இருக்கிறது.

யோகி பாபு நடித்து வரும் அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் இந்த திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாக இருக்கிறதாம் இதனால் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூல் செய்து விடும்.

என பல சினிமா பிரபலங்கள் கூறிவருகிறார்கள் பல திரைப்படங்கள் நேரடியாக இணையதளம் வழியில் வெளியாகும் நிலையில்  இந்த திரைப்படம் நேரடியாக சன் டிவி தொலைக்காட்சியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.