வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை “ஸ்ரீதிவ்யா” குவித்து வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

நடிகை ஸ்ரீதிவ்யா தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார் முதல் படமே அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

அதன் பின் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வகையில் நடிகை ஸ்ரீதிவ்யா காக்கி சட்டை, வெள்ளக்காரதுரை, ஜீவா, ஈட்டி, பெங்களூர் நாட்கள், சங்கிலி புங்கிலி கதவ தொற போன்ற பல்வேறு படங்களில் நடித்து அசத்தினார் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றியை ருசித்து இருந்தாலும்..

சமீபகாலமாக நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் அவரும் மற்ற நடிகைகள் போல சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை அள்ளி வீச  உள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன காரணம் பெருமளவு கிளாமர் இல்லாமல் புடவை பாவாடை தாவணி போன்ற பாரம்பரிய கிராமத்து உடையில் வந்து அசத்தி இளசுகளை வெகுவாக தன் பக்கம் இழுத்து போட்டாள்.

இப்பொழுது இவரை நம்பி ஓரிரு திரைப்பட வாய்ப்புகள் கையில் இருக்கின்றன 2022 – ல் ஒத்தைக்கு ஒத்த மற்றும் மலையாளத்தில் ஒரு படம் உன் கையில் வைத்திருக்கிறார். ஒத்தைக்கு ஒத்த திரைப்படம் ஹிட்டடிக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீ திவ்யா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பார்க்கையில் நடிகை ஸ்ரீதிவ்யாவின் சொத்து மதிப்பு சுமார் 10 கோடி என கூறப்படுகிறது.

Leave a Comment