ஷாருக்கானின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா.? நீங்க கனவுல கூட நினைத்து பார்த்து இருக்க மாட்டிங்க..

90 காலகட்டங்களிலிருந்து இப்ப வரையும் இந்தியில் சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருவர் நடிகர் ஷாருக்கான் இப்பொழுது கூட தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் இதோடு மட்டும் தன்னை நிறுத்திக் கொள்ளாமல் சினிமாவுலகில் பாடகராகவும் திரைக்கதை ஆசிரியராகவும், தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார்.

இதனால் இவர் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வலம் வருகிறார். ஹிந்தியில் மட்டும் தனது நடிப்பு பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் அந்த வகையில் தமிழில் கூட இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றியை ருசித்து உள்ளன.

அந்த வகையில் கமலுடன் இணைந்து ஹேராம் மற்றும் ஒரு சில படங்கள் தான் அடித்துள்ளார். இவர் கடைசியாக சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூ இயர், ரா ஒன் போன்ற பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை  கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் தற்போது லயன் என்ற திரைப்படமும் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை பிரபல தமிழ் இயக்குனர் அட்லீ உருவாக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் போய்க்கொண்டு இருக்கிறது இந்த படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க ராணுவத்தை சமந்தமாக உருவாக்குவதாகவும்  கூறப்படுகிறது.

இப்படியே இருக்கின்ற நிலையில் நடிகர் ஷாருக்கான் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஷாருக்கானின் தற்போதைய நெட்வொர்க் மட்டுமே சுமார் 5000 கோடி இருக்கும் என கூறப்படுகிறது உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் லிஸ்டில் ஷாருக்கான் இருந்து வருகிறார்.

Leave a Comment