வலிமை திரைப்படத்திற்காக நடிகர் அஜித்குமார் வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு கோடி தெரியுமா.? ரஜினி, விஜயை காட்டிலும் குறைவுதான்.

ajith
ajith

சினிமா உலகில் நடிகர் அஜித்தை இரண்டு பிரிவுகளாக நாம் பிரிக்கலாம் ஆமா ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் அஜித் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நம்பி கதையை கேட்காமல் நடித்த காலம் உண்டு ஆனால் தற்போது தனது ரசிகர்களுக்காக அந்த எண்ணத்தை மாற்றி தற்போது கதையை கேட்டுவிட்டு படத்தின் கதை சிறப்பாக இருந்தால் மட்டுமே நடிக்கிறார்.

அந்த காரணத்தினால் தான் சமீப காலமாக அஜித் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் அடிக்கின்றன. அந்த வெற்றியை தொடர்ந்து ருசிக்க சிறந்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்து கைகோர்த்து வருகிறார் தற்போது தனது 60வது திரைப்படமான வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஹச். வினோத் என்கின்ற படைப்பாளி இந்த படத்தையும் வேற லெவெலில் எடுத்து உள்ளார் என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் சினிமாவில் பொறுமையாக இருந்து சூப்பர் ஹிட் படங்களை ஒவ்வொன்றாக கொடுத்து வருபவர் ஹச். வினோத். இவர் தற்போது இந்த படத்தை எடுத்து உள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. வலிமை படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு மற்றும் பல பிரபலங்கள் நடித்து அசத்தி உள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் நிறைந்த திரைப் படமாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இதுவரை இந்த படத்தில் இருந்து பல்வேறு விதமான அப்டேட்கள் வந்துள்ளன கடைசியாக கூட வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ வெளிவந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது. மேலும் வலிமை படத்திலிருந்து மூன்றாவது பாடல் மற்றும் டீசர் ஆகியவை வெளிவர இருக்கின்றன இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பிசினஸ் வேட்டையும் நல்ல பண்ணி வருகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் வலிமை திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது அதன்படி பார்க்கையில் அஜித் வலிமை திரைப்படத்திற்கு மட்டுமே சுமார் 70 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளிவருகின்றன இதை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் இந்த தகவல் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.