சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி குவித்து வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? வியப்பில் ரசிகர்கள்.

karthi
karthi

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடைபது நடிகர் கார்த்தியின் வழக்கம். முதலில் இவர் பருத்தி வீரன் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து ஆக்ஷன் காதல் சென்டிமென்ட் போன்ற படங்களிலும் நடித்து வெற்றி பெற்றார் போகப்போக..

அதிலிருந்து மாறுபட்டு தற்பொழுது வரலாற்றுப் பாடங்களில் மற்றும் வித்தியாசமான படங்களில் நடிப்பதால் இவரது படத்தைப் பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். நடிகர் கார்த்தி கடைசியாக சுல்தான் படத்தில் நடித்திருந்தார் அந்த படம் தோல்வியை தழுவியது. அதிலிருந்து மீண்டுவர சிறந்த இயக்குனருடன் கமிட் ஆகி தற்போது நடித்து வருகிறார்.

இப்பொழுது கார்த்தியின் கையில் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் போன்ற படங்கள் இருக்கின்றன. அதே சமயம் இந்த படங்கள் அனைத்தும்  வேற மாதிரி இருக்கும் என்பதால்.. ரசிகர்களும் மக்களும் பெரிதளவில் இந்த படங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்த மூன்று படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கார்த்தி நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்த படங்கள் ஹிட் அடிக்கும் பட்சத்தில் கார்த்தியின் சினிமா பயணம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மைக்காலமாக சினிமா உலகில் பயணிக்கும் நடிகர் நடிகைகள் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்துள்ளனர் என்பது குறித்து நாம் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்து அசத்தும்  நடிகர் கார்த்தி குவித்து வைத்திருக்கும் முழு சொத்து மதிப்பு குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.  அதன்படி பார்க்கையில் நடிகர் கார்த்தி சொத்து மதிப்பு 90 அல்லது 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது.