தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழ் சினிமா ஆரம்பத்திலேயே தோல்வியை கொடுத்த பூஜா ஹெக்டே அதன்பின் தமிழ் பக்கம் திரும்பாமல் மற்ற மொழிகளில் தொடர்ந்து தனது கிளாமர் மற்றும் திறமையை காட்டி சினிமா பிரபலங்களையும் மக்களையும் மயக்கி போட்டார்.
மேலும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து டாப் நடிகர்களுடன் நடித்து அசத்தி வருகிறார். இப்படி பயணித்துக்கொண்டிருந்த இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்த தளபதி விஜயுடன் நடிக்க வருகிறார் இந்த படம் தமிழ் சினிமாவில் நல்லதொரு வெற்றியை பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது பல்வேறு திரைப்படங்களில் நடிக்க வந்தார். 2022-ல் பூஜா ஹெக்டே கையில் யில் பல்வேறு திரைப்படங்கள் இருக்கின்றன அந்த வகையில் ராதேஷ்யாம், சர்க்கஸ் ஆச்சார்யா ஆகிய திரைப்படங்கள், இருக்கின்றன இதனால் பூஜா ஹெக்டே வின் மார்க்கெட் உயர்ந்த வண்ணமே இருக்கிறது.
மேலும் அவர் ஒரு மாடல் அழகி என்பதை நிரூபிக்கும் வகையில் தம்மாத்தூண்டு ட்ரெஸ்ஸை போட்டுக்கொண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பூஜா ஹெக்டே சொத்து மதிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி பார்க்கையில் நடிகை பூஜா ஹெக்டே குவித்து வைத்திருக்கும் மொத்த சொத்து மதிப்பு மட்டுமே சுமார் 51 கோடி என தெரியவந்துள்ளது. சினிமாவில் நடித்து இருந்தாலும் அதற்குள் இவ்வளவு கோடி என்பது தற்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.