வயது 50 ஆனாலும் இன்றுவரை திருமணமே வேண்டாம் என ஒண்டிக்கட்டையாக இருக்கும் நடிகை தபுவின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

thabu-1
thabu-1

தமிழ் சினிமாவில் காதல் தேசம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால் தடம் பதித்தவர் தான் நடிகை தபு.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைபடங்களில் நடித்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமாகவும் பல்வேறு ரசிகப் பெருமக்களை கவர்ந்து வலம் வந்துள்ளார்.

இந்நிலையில் நமது நடிகை இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சினேகிதியே, டேவிட் போன்ற பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி நடிகை தபு ஹிந்தி தெலுங்கு ஆங்கிலம் மலையாளம் என பிற மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்தது மட்டுமல்லாமல் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே கூறலாம்.

தற்சமயம் கூட நடிகை தபு ஹிந்தியில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருவது மட்டுமில்லாமல் மலையாளத்திலும் கூட ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாக அமைந்துள்ளது.

பார்ப்பதற்கு இளம் நடிகை போல தோற்றம் கொண்டிருந்தாலும் நமது நடிகைக்கு தற்போது 50 வயது  ஆகிவிட்டது ஆனால் இன்றுவரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இவ்வாறு தன்னுடைய வாழ்க்கையில் திருமணமே வேண்டாம் என இருக்கும் நமது நடிகையின் சொத்து மதிப்பு சுமார் 52 கோடி  என தகவல்கள் வெளிவந்துள்ளது. இவ்வாறு வெளிவந்த செய்தியானது சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.