நடிகை தமன்னாவின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா.?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை தமன்னா. இவர் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்த பின்பு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் உள்ள அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் நடிகை தமன்னா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இப்படி படங்களில் பிசியாக இருந்து வரும் நடிகை தமன்னா பலமுறை திருமண வதந்திகளில் சிக்கியதுண்டு. அந்த வகையில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த தமன்னா தன்னுடைய வீட்டில் வரன் பார்ப்பதாக கூறியுள்ளார் ஆனால் தனக்கு தற்போது திருமணத்தில் விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளதாக கூறியிருந்தார்.

இப்படி திருமணத்தின் வதந்தியில் சிக்கிவரும் தமன்னா தற்போது பாலிவுட் திரைப்பட நடிகரான விஜய் வருமாவை காதலித்து வருவதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் வர்மாவுடன் புத்தாண்டை கொண்டாடியது மட்டுமல்லாமல் விஜய் வருமாவுக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து ரசிகர்களை ஆச்சிரிய பட வைத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க நடிகை தமன்னாவின் முழு சொத்து மதிப்பு விவரம் பற்றிய ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது நடிகை தமன்னாவின் முழு சொத்து மதிப்பு 110 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நடிகை தமன்னா ஆண்டிற்கு 12 கோடி ரூபாய் சம்பாதிப்பதாகவும், மாத வருமானம் ஒரு கோடி ரூபாய் எனவும், ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 4 முதல் 5 கோடி ரூபாய் சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஒரு ஐட்டம் பாடலுக்கு 60 லட்சம் சம்பளமாக பெற்று வருகிறாராம் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடக்க விழாவில் வெறும் பத்து நிமிடம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமன்னா 50 லட்சம் வரை சம்பளம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னா பிரபல பிராண்ட் விளம்பரங்களிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் நடிகை தமன்னாவிடம் உலகின் ஐந்தாவது பெரிய வைரம் உள்ளதாகவும் கூறப்படுகிறது அதனுடைய விலை மட்டுமே சுமார் 2 கோடி மதிப்புள்ளதாகவும் அந்த வைரத்தை நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா அன்பளிப்பாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் நடிகை தமன்னாவுக்கு மும்பையில் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளதாகவும், பல சொகுசு கார்கள் உள்ளதாகவும், கூறப்படுகிறது இதயம் தாண்டி அவருடைய கை பை விலை மட்டுமே சுமார் மூன்று லட்சம் என்று கூறப்படுகிறது.

Leave a Comment