சமந்தா , நாக சைதன்யா திருமணத்தின் போது ஏற்பட்ட மொத்த செலவு எவ்வளவு தெரியுமா.? தெரிஞ்ச உங்களுக்கு தூக்கி வாரி போட்டுடும்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் பல்லாவரத்து பெண்ணான சமந்தா தற்போது தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார். காரணம் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி டாப் நடிகர்களுடன் நடித்து வந்த இவர் டாப் நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைய் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பிறகு இரு மொழிகளிலுமே செம வரவேற்பை இவர் பெற்றுள்ளதால் தென்னிந்திய சினிமாவில் கவனிக்கக்கூடிய நடிகையாக சமந்தா மாறியுள்ளார். மேலும் இவரது சமீபத்திய திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஆனால் ஒரு சில படங்கள் சர்ச்சையில் அமைந்திருந்தன. ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவை நோக்கி வெற்றி நடை கண்டு வருகிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிக ஹிட் படங்களை கொடுத்த நிலையில் தற்போது இந்தியிலும் வெகுவிரைவிலேயே நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கூட அண்மையில் நடிகை சமந்தா நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். பேமிலி மேன் 2 படத்திலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

இப்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் நடிகைகளுக்கு பிடித்த நடிகையாக சமந்தா இருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா நடித்த படத்தின் போது தான் பிடித்து போய் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து  கொண்டனர். இவர்கள் திருமணம் செய்த கொண்டபோது எவ்வளவு செலவானது இது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

நாகசைதன்யா மற்றும் சமந்தா திருமணம் மிகவும் கோலாகலமாக கோவாவில் நடந்தது இதில் 150 பேர் மட்டுமே கலந்து கொண்டதாகவும் அக்டோபர் 6 2017 ஆம் ஆண்டு இந்து முறைப்படியும், ஏழாம் தேதி கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் நடந்தது படு பிரம்மாண்டமாக நடந்த அவர்களது திருமண செலவு மட்டும் சுமார் பத்து கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு திருமணம் அரங்கேறியது.