சூர்யா நடிப்பில் வெளிவந்த “ஆறு” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.? அப்பவே இவ்வளவு கோடியா.?

0
aaru
aaru

கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடிக்கக்கூடிய நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சூரரைப்போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் சூர்யா நடிப்பு வேற லெவல். மேலும் படமும் சூப்பர் ஹிட் அடித்தது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

அப்படி தான் 2005 ஆம் ஆண்டில் கூட  இயக்குனர்  ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்த மாஸ் கமர்சியல் படம் தான் ஆறு. இந்தப் படத்தில் சூர்யாவுடன் கைகோர்த்து த்ரிஷா, ஐஸ்வர்யா, பாஸ்கரன், வடிவேலு, ஆஷிஷ், ஜெயபிரகாஷ், மாளவிகா அவினாஷ், தம்பிராமையா, டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி,  மனோபாலா, சிங்கமுத்து மற்றும் பல டாப் நடிகர், நடிகைகள் நடித்து அசத்தி இருந்தனர்.

ஆறு படம் அப்பொழுது வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்ப்பை பெற்று அசத்தியது நடிகர் சூர்யா கேரியரில் மிக முக்கியமான திரைப்படமாக இந்த படம் அமைந்தது என்பது குறிப்பிடதக்கது இந்த நிலையில் இந்த படத்தின் வசூல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி பார்க்கையில் சூர்யா நடித்த ஆறு திரைப்படத்தின் மொத்த வசூல் 18 கோடி என கூறப்படுகிறது. அப்பொழுதே 18 கோடி என்பதே மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக தான் பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியை அறிந்த சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர் சூர்யாவுக்கு எப்படி ஆறு திரைப்படம் மிக முக்கியமான படமோ அதே போல அவரது ரசிகர்களுக்கு ஆறுபடம் அப்பொழுதிலிருந்து இப்போதுவரையிலும் பிடித்த திரைப்படமாக இருந்து வருகிறது.