அதிக எதிர்பார்பில் வெளியான “சீமராஜா” படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

Sivakarthikeyn seemaraja movie : தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றவர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாவீரன் திரைப்படம் ஒரு வித்தியாசமான கான்செப்ட்டைக் கொண்டது. மேலும் சிவகார்த்திகேயனின் மாறுபட்ட நடிப்பு பலரையும் கவர்ந்து இழுத்தது.

படம் நன்றாக இருந்ததால் அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமில்லாமல் 80 கோடிக்கு மேல் வசூல் செய்தது அதனை தொடர்ந்து அயலான் மற்றும் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி உள்ளது.

பொன்ரம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் முதலில் வெளிவந்த திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் அதனைத் தொடர்ந்து இந்த கூட்டணியில் ரஜினி முருகன் படமும் வெளியானது இந்த இரண்டு திரைப்படங்களும் மக்கள் மற்றும் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி தீர்த்தனர்.

அதனால் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து மூன்றாவது முறையாக சீமராஜா படத்தில் கைக்கொடுத்தனர் இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்பட்டது பெரிய பொருட்ச அளவில் உருவான இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அவருடன் இணைந்து நெப்போலியன், சமந்தா, சூரி, நாடோடிகள் கோபால்..

லால், மனோபாலா, சிம்ரன், கீர்த்தி சுரேஷ், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாமல் சுமாராக ஓடியது உலகம் முழுவதும் படம் 65 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சீமராஜா திரைப்படம் வெளியாகி இத்துடன் 5 வருடங்கள் ஆகிய நிலையில் இதனை ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் கொண்டாடி வருகிண்டன்ர்.