முதல் வாரத்தில் அண்ணாத்த திரைப்படம் அள்ளிய மொத்த கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா.? அசரவைக்கும் ரிப்போர்ட்.

தமிழ் சினிமாவில் கிராமத்து கதை உள்ள படங்களை சமீப காலமாக எடுத்து வெற்றி கொண்டு வருபவர் இயக்குனர் சிறுத்தை சிவா. முதலில் நடிகர் கார்த்தியை வைத்து சிறுத்தை என்ற படத்தை எடுத்து இருந்தார். அதன் பின் அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று கிராமத்தை படங்களை கொடுத்து அசத்தினார்.

அதிலும் கடைசி படம் விசுவாசம் திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது மேலும் படம் மிக அற்புதமாக இருந்தது எடுத்து ரஜினி விசுவாசம் திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சிவாவை  புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் அவருக்கு வாய்ப்பையும் கொடுத்தார் அப்படி உருவானது தான் அண்ணாத்த திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்திலிருந்து நகரம் பக்கம் கதையை கொண்டு செல்லும் இந்த படமும் தீபாவளி அன்று வெளியாகி.

தற்போது சூப்பர் ஹிட் அடித்துள்ளது. அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களை பெரும் தவற வில்லை என்பதால் ஆரம்ப நாட்களில் கலவையான விமர்சனத்தை பெற்றது இருப்பினும் வசூலில் மட்டும் தட்டி தூக்கியது அதற்கு காரணம் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகளை வெகுவாக இந்த  படம் வந்துள்ளதால் வசூல் வேட்டை மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

நான்கு நாட்களுக்கள்ளேயே 100 கோடியை தாண்டி புதிய சாதனை படைத்தது அண்ணாத்த. வெறும் நான்கு நாட்களிலயே இவ்வளவு கோடியை ரஜினியின் அண்ணாத்த அள்ளியதை இதையடுத்து இனி வருகின்ற நாடுகளில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்த்தது ஆனால் மழை குறுக்கீடு அந்த படத்தின் வசூலில் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டு வருகிறது.

இருப்பினும் வார இறுதியில் அண்ணாத்த திரைப்படம் 200 கோடியை அள்ளிய புதிய சாதனை படைத்துள்ளது இன்னும் இருக்கின்ற நாட்களில் நிச்சயம் இந்த படம் 100 கோடி அல்லது 200 கோடியை சேர்த்து அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது. ரஜினி இந்தப் படமும் ஒரு சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டது. இதனை அடுத்து சிறுத்தை சிவாவுடன் மீண்டும் ரஜினி  இணைந்தாலும் இணையலாம் என்ற ஒரு பேச்சு அடிபட்டு கொண்டு தான் வருகிறது.

Leave a Comment