தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் டைட்டில் மற்றும் ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா.? காமெடி நடிகர் யாரென பார்த்தால் அசந்து போயிடுவீங்க.!

0

நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எந்த அளவிற்கு கிடைத்து வருகிறதோ அதேபோல் மற்ற துறைகளில் கலக்கி வரும் பிரபலங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் தோனிக்கு தமிழ்நாட்டில் எந்த அளவிற்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

சினிமா பிரபலங்களை விட இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இவருடைய ரசிகர்கள் இவரை தல என மிகவும் அன்பாக அழைத்து வருகிறார்கள். இவ்வாறு கிரிக்கெடில் கலக்கி வரும் தோனி தற்பொழுது கோலிவுட் படம் தயாரிக்க முடிவெடுத்து இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே அந்த நிறுவனத்திற்கு தோனி என்டர்டைன்மென்ட் என பெயர் வைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் இந்த தகவலுக்குப் பிறகு பெரிதாக எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறப்பான தகவல் ஒன்று வெளியாக இருக்கிறது.

அதாவது இந்நிறுவனத்தின் முதல் படத்தின் டைட்டில் மற்றும் எந்தெந்த திரை பிரபலங்கள் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாகவும் இவருக்கு ஜோடியாக லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலம் அடைந்த இவனா நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தினை ரமேஷ் தமிழ்மணி இயக்க யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு Let’s Get Married என படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த வீடியோ வெளியாக இருக்கும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.