OTT தளத்தில் வெளியாகும் “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி – ஒளிபரப்பப்படும் எந்த நேரம், தேதி தெரியுமா.! இதோ பாருங்கள்.

இப்போது நிலவும் சூழ்நிலை சரியில்லாததால் சின்னத்திரை வெள்ளித்திரை போன்றவை ஓடிடி தளத்தையே நாடுகின்றன. அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் திரையரங்குகளில் 50% இருகைகளுடன் செயல்பட்டு வருவதால்  டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டார்யில் பல்வேறு திரைப்படங்கள், வெப் சீரிஸ் போன்றவை வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஹாட்ஸ்டார்யிலும் மக்கள் கண்டுகளித்து வந்தன. மேலும் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஓட்டுகளை ஹாட்ஸ்டார்யிலே செலுத்தி வந்தன. தற்போது அண்மையில் நிறைவுபெற்ற பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ராஜு.

பிக் பாஸ் டைட்டில் வென்று ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள பரிசுத்தொகையை பெற்றார்.   அவரை தொடர்ந்து 2-வது இடத்தை பிரியங்கா பிடித்துள்ளார். மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி புதிதாக பிக் பாஸ் அல்டிமேட் என ஹாட்ஸ்டார்யில் வெளியாக உள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்த பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் சிலர் தான் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்களாம்.  ஆம் அதில் சினேகன், ஓவியா, அபிராமி வெங்கடாச்சலம், சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், வனிதா, ஜூலி போன்ற சில பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி ஒளிபரப்ப உள்ள தேதி ப்ரோமோவுடன் வெளிவந்துள்ளது. அதன்படி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி வருகின்ற 30ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

Leave a Comment