தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்கள் அண்மைக்காலமாக வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்த மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்விக்கின்றனர். இவர்களது படங்கள் சற்று தள்ளி வந்தால் போதும் ரசிகர்கள் ரொம்ப வருத்தப்பட்டு போய்விடுகிறார்கள்.
அவர்களை சந்தோஷப்படுத்த படம் ஷூட்டிங் தொடங்கிய உடனே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிரைலர் பாடல் என எதையாவது படக்குழு விட்டுக்கொண்டே இருக்கும். கடைசியாக படம் வெளிவந்தால் ரசிகர்களாக திருவிழா போல ஒரு வாரத்திற்கு கொண்டாடி படத்தை வெற்றி பாதைக்கு அழைத்து செய்வார்கள் இப்படி டாப் நடிகர்கள் படங்கள் போய்க் கொண்டுதான் இருக்கிறது.
குறிப்பாக தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, அஜித், விஜய் ஆகியோர் படங்கள் இன்னும் மாபெரும் அளவில் கொண்டாடுவது வழக்கம். இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பாக அந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடுவார்கள்.
அந்த டிரைலருக்கு எத்தனை பேர் பார்த்து உள்ளார் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொண்டு சமூக வலைதளப் பக்கங்களில் சண்டை போட்டுக் கொள்வதும் உண்டு அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியிடப்பட்ட ட்ரெய்லரில் அதிக பேர் பார்த்துள்ள டிரைலர் எது என்பது குறித்து தற்போது தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பார்வையில் முதல் இடத்தில் விஜய்யின் பிகில் பட ட்ரைலர் உள்ளது – இதை பார்த்து உள்ளவர்களின் எண்ணிக்கை மட்டும் – 57 மில்லியன். இரண்டாவது இடத்திலும் தளபதி விஜய்யின் பீஸ்ட் பட ட்ரெய்லர் பார்த்தவர்களின் எண்ணிக்கை – 56 மில்லியன். மூன்றாவது இடத்தில் அஜித்தின் விசுவாசம் – 34 மில்லியன் நான்காவது இடத்தில் அஜித்தின் வலிமை – 24 மில்லியன் ஐந்தாவது இடத்தில் விஜயின் தெறி – 18 மில்லியன்.