அஜித் நடிக்க வேண்டிய படத்தில் விக்ரம் நடித்து மாபெரும் ஹிட்டான கதை தெரியுமா.?

தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் அஜித் குமார் இவரது திரைப்படங்கள் ஆரம்ப காலகட்டத்தில் தோல்வி அடைந்து கொண்டே போனாலும் தன்னம்பிக்கை நட்சத்திரமாக இருந்து ஒரு சில ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

இவரது நடிப்பில் இறுதியாக வெளியான துணிவு திரைப்படம் பல கோடி வரை வசூல் செய்து விட்டது இதனை தொடர்ந்து பார்த்தால் இவரது 62 ஆவது திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் அப்டேட் அடுத்த மாதம் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

எனவும் சமீபத்தில் தகவல் வெளியானதை நாம் பார்த்திருப்போம்.இவரைப் போலவே தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்தவர் விக்ரம் இவரது நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ஜெமினி.

விக்ரம் நடித்த இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித் தான் ஆனால் ஒரு சில காரணங்கள் குறித்து நடிகர் அஜித்தால் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.அதன் பிறகு தான் இந்தத் திரைப்படத்தில் விக்ரம் நடித்து மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி விட்டார்.

vikram
vikram

இந்த திரைப்படத்தை இயக்குவதற்கு இயக்குனர் சரண் அவர்கள் திட்டமிட்டபொழுது அஜித் தான் முதலில் நடிக்க இருந்ததாகவும் அதன் பிறகு ஒரு சில காரணங்கள் குறித்து நடிகர் விக்ரம் ஜெமினி திரைப்படத்தில் நடித்து விட்டதாகவும் இந்த தகவல் தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment