“ஜெயிலர்” படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வாயடைத்துப் போன ரசிகர்கள்.!

தமிழ் சினிமா உலகில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக நடித்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவி முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருகிறார்.

ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த படம் சுமாரான வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக தனது 169 வது திரைப்படத்தில் நடிக்க ரெடியாக உள்ளார். இந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் இதுவரை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கி வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியும் நெல்சனும் முதல் முறையாக இணைவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது இந்த படத்தின் சூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது அதற்கு முன்பாகவே ரஜினி 169 படத்தின் டைட்டிலை வெளியிட்டு அசத்தி உள்ளது படக்குழு.

ரஜினியின் 169 வது படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. போஸ்டரில் கத்தியில் ரத்தம் வடிய வடிய மாசாக இருந்து வந்துள்ளதை வைத்து பார்க்கும்போது படம் ஆக்ஷனுக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என தெரியவருகிறது. ரஜினி 169 படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், யோகி பாபு, பிரியங்கா அருள் மோகன் மற்றும் பலர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி தனது 169 படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கப் போகிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ரஜினி “ஜெயிலர்” படத்திற்காக சுமார் 151 கோடி சம்பளமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த ஒரு டாப் ஹீரோவும் இவ்வளவு சம்பளம் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment