பாசமலர்கள் திரைப்படத்தில் அஜித் நடித்ததற்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.? இதோ பாருங்க.

0

தமிழ் சினிமாவில் பல நடிகர்களையும் தாண்டி தற்போது நிறைய சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் அது தல அஜித் தான் இவர் தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய கஷ்டத்தை தாண்டி தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தை பிடிப்பதற்காக இவர் மிகவும் போராடி தற்போது தமிழ்நாட்டில் அதிகப்படியான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

பொதுவாகவே தல அஜித்தின் திரைப்படங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு சூப்பர்  ஹிட் ஆகிறதோ அதேபோல் இவரது திரைப்பயணத்தில் மிகவும் தோல்வியான திரைப்படங்களையும் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அவர் தோல்வியான திரைப்படங்களை கொடுத்தாலும் தனது விடா முயற்சியினால் பல திரைப்படங்களில் நடித்து தற்போது கடந்த சில வருடங்களாகவே இவர் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து வருவது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தை பற்றி அப்டேட் கேட்டு வருகிறார்கள் ஆனால் தல அஜீத்தின் ரசிகர்களுக்கு சமீப காலமாகவே  அவரது புகைப்படங்கள் மட்டும் அவர் பற்றிய விஷயங்கள் தான் வெளியாகிறது.

மேலும் தல அஜித் தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நடிக்கும் பொழுது ஒரு சில முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அவ்வாறு இவர்  1994 ஆம் ஆண்டு சுரேஷ் மேனன் இயக்கத்தில் பாசமலர்கள் என்ற திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம்.

ajith954
ajith954

மேலும் இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி மற்றும் ரேவதி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் ஆனால் அஜித் இந்த திரைப்படத்தில் கெஸ்ட் ரோல் மட்டும் நடித்ததற்கு அஜித் வெறும் 2500 மட்டும் சம்பளம் வாங்கி உள்ளார் என இந்த தகவலை இந்த படத்தின் இயக்குனர் சுரேஷ் மேனன் ஒரு பேட்டியில் கூறியதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.