விஜய் டிவி பிரபலம் ரக்ஷன் ஒரு எபிசோடிற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? தெரிஞ்ச ஆச்சரியப்படுவீங்க..

0
rakshan
rakshan

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மிக வெற்றிகரமாக செல்ல முக்கிய காரணம் அந்த நிகழ்ச்ச்சியையும் தாண்டி அதை தொகுத்து வழங்கும் பிரபலங்கள் மக்களின் மனதைக் கவரும்படி காமெடியாக மற்றும் அதே சமயம் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்றவாறு பேசி ரசிகர் மற்றும் மக்களை பார்க்க வைக்கின்றனர்.

இதனால் இந்த தொகுப்பாளர் தனது முழு திறமையையும் வெளியே காட்டுகின்றனர் அதிலும் குறிப்பாக விஜய் டிவி சொல்லவே வேண்டாம் அதிக நிகழ்ச்சிகளை நடத்துகிறது ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு ஏற்ற மாதிரி பல தொகுப்பாளர்கள் தன் வசம் வைத்துள்ளது. நடிகர் நடிகைகள் என்றால் டிடி அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது வழக்கம் காமெடி நிகழ்ச்சிகள் மா கா பா மற்றும் ரக்ஷன் போன்றவர்கள் தொகுத்து வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இவர்களை தொடர்ந்து சில நிகழ்ச்சிகளை மணிமேகலை பிரியங்கா போன்ற பிரபலங்களும் தொகுத்து வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதில் நாம் ஒருவரைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அந்த பிரபலம் வேறு யாருமல்ல.. விஜய் டிவி தொலைக்காட்சிகளில் கலக்கப்போவது யாரு, ஜோடி, ரெடி ஸ்டெடி போ, குக் வித் கோமாளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ரக்ஷன்.

சமீபத்தில் நடந்து முடிந்த காமெடி ராஜாக்கள் என்ற நிகழ்ச்சியை இவர் தான் திறன்பட தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலமே கோடான கோடி ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து விடுத்துள்ளார் அதனால் இவரை சமூகவலைதளத்தில் பின்பற்றுவோரும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரக்சன் சின்னத்திரையையும் தாண்டி வெள்ளித்திரையில் துல்கர் சல்மானுடன் கைகோர்த்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தொகுப்பாளரும், நடிகருமான ரக்ஷன் விஜய் டிவியில் ஒரு எபிசோடிற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை பற்றிதான் பார்க்கவிருக்கிறோம் அதன்படி இவர் ஒரு எபிசோடிற்கு 1 லட்சம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.