பின்னணி பாடகர் “சித் ஸ்ரீராம்” ஒரு பாடலுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? தேசிய விருது பெற்ற ஸ்ரேயா கோஷல் சம்பளத்தை விட அதிகமாம்.

sid-sreeram
sid-sreeram

சினிமா உலகைப் பொறுத்தவரை ஒரு படம் ஹிட் அடிக்க நடிகர், நடிகைகளையும் தாண்டி சின்ன சின்ன வேலைகள்தான் படத்தை முழுமை அடையச் செய்ய வைக்கிறது அந்த வகையில் இசை மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது இந்த இசை பக்கபலமாக இருப்பது பின்னணி இசை, பாடல் போன்றவைகள்தான் முழுமை பெற வைக்கின்றன.

அதிலும் குறிப்பாக பாடல்கள் சிறப்பாக இருந்தால் இசையும் சிறப்பாக இருக்கும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல்வேறு சிறப்பான பாடல்களை பாடி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள அவர் ஸ்ரேயா கோஷல் இவர் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் பல்வேறு படங்களுக்கு பாடலை பாடியுள்ளார்.

ஸ்ரேயா கோஷால் ஹிந்தி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, பஞ்சாபி போன்ற பல்வேறு மொழிகளில் பாடி அசத்தியுள்ளார் அதன் காரணமாகவே இவர் இதுவரை நான்கு முறை தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரேயா கோஷல் இதுவரை பல்வேறு பாடல்களைப் பாடி மக்களின் மனதில் இடம் பிடித்து உள்ளார் இவரை போலவே பாடகர் சித் ஶ்ரீராம்  பல பாடல்கள் பாடியுள்ளார். அது ஒவ்வொன்றும் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து உள்ளது.

தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி வருகிறார் இவர் பின்னணி பாடகராக இருந்தாலும் ஒரு பாடலுக்கு இவர் சுமார் 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார் பெண் பாடகர்களில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்துள்ள ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலுக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.