முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சினிமாவுலகில் ஒரு சில ஜோடிகள் படத்தில் நடிக்கும்போது அந்த படம் ஆட்டோமேட்டிக்காக வெற்றியை குவிக்கும் அந்த வகையில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஒரு படத்தில் இணைந்து நடித்தால் போதும் அந்த படம் வெற்றியை ருசிக்கும் இதுவரை ஜெயலலிதா, எம்ஜிஆர் இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே மெகா ஹிட்டாக தான் இருந்து வந்துள்ளன.

ஜெயலலிதா 1965ஆம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது திறமை,அழகு ஆகியவற்றை வெளி காட்டி ரசிகர்களை கவர்ந்து இழுத்தார் மேலும் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் எம்ஜிஆருடன் இரண்டாவது திரைப்படத்திலேயே இவர் நடித்து விட்டார்.

அதில் ஒருவன் படத்தின் மூலம் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஜோடி சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்து அசதினர் ஜெயலலிதா எம்ஜிஆர் உடன் மட்டும் நடிக்காமல் சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் போன்ற பல்வேறு நடிகர்கள் படங்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த ஜெயலலிதா திடீரென 1982 ஆம் ஆண்டு தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார் அங்கேயும் வெற்றிகளை குவித்தார். ஜெயலலிதா ஐந்து முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஜெயலலிதா ஜெயலலிதா முதல் படத்தில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது குறித்த தகவல் ஒன்று என்று வெளிவந்து உள்ளது. அதன்படி பார்க்கையில் அவருக்கு கன்னடத்தில் வெளியான சின்னட கொம்பே திரைப்படத்துக்காக அவர் 3000 ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Leave a Comment