மாஸ்டர் செஃப், பிக் பாஸ் 5 மற்றும் சர்வைவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஒவ்வொரு தொகுப்பாளருக்கும் வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

சமிபகாலமாக வெள்ளித்திரைக்கு ஈடு இணையாக பயணித்து ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் தக்கவைத்து கொள்ள சின்னத்திரை. பல  சீரியல்கள் மற்றும் புதிய நிகழ்ச்சிகளை கொடுத்து ரசிகர்களின் மற்றும் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அந்த வகையில் சின்னத்திரையில் மூன்று இண்டர்நேஷனல் ஷோக்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை டாப் நடிகரான விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் ஆரம்பத்திலிருந்து இந்த நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தில் இருந்து வந்த நிலையில் தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதை தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் சீசன் சீசனாக வெற்றியை கொடுத்து வரும்  பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் வெகு விரைவிலேயே தொடங்க இருப்பதால் அதற்கான புரோமோ,லோகோ  ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சிஎப்போது வெளியாகும் என்பது ரசிகர்களின் கேள்வியாக இருந்துவருகிறது இந்த நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக கமல்ஹாசன் ஐந்தாவது முறையாக தொகுத்து வழங்குகிறார். இந்த இரண்டு தொலைக்காட்சியை தொடர்ந்து புதிதாக களத்தில் குதித்தது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி புத்தம் புதிய நிகழ்ச்சியான survivor என்ற நிகழ்ச்சியை தொடங்கியுள்ளது இதுவும் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடுகிறது.

நிகழ்ச்சி சிறப்பாக பயணிக்க அதன் தொகுப்பாளர் தான் காரணம் அந்த வகையில் இந்த மூன்று நிகழ்ச்சிகளும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற காரணம் இந்த மூன்று ஹீரோக்கள் தான்.அந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பதை பற்றிதான் நாம் தற்பொழுது பார்க்க உள்ளோம்.

அந்த வகையில் கமல்ஹாசன் பிக்பாஸ் 5வது நிகழ்ச்சிக்காக 60 கோடி சம்பளம் வாங்குகிறார். விஜய் சேதுபதி மஸ்டர்செஃப் நிகழ்ச்சிக்காக ஒரு எபிசோடுக்கு 50 லட்சம் வாங்குகிறார். ஆக்சன் கிங் அர்ஜுன்  புதிதாக உருவாகியுள்ள சர்வைவர் நிகழ்ச்சிக்காக 5 கோடி சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Comment