தமிழ் சினிமாவில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடர்ந்தவர் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் இவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய தோல்வி படமாக அமைய பின் நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு பக்கம் அடியெடுத்து வைத்தார்.
தெலுங்கு சினிமா உலகை பொறுத்தவரை திறமையையும் அதிக கவர்ச்சி காட்டினால் போதும் அங்கு முன்னணி நடிகையாக வலம் வர முடியும் அதை நன்கு புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல படங்களில் பெருமளவு கிளாமரையும்,திறமையையும் காட்டி நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டதோடு தனக்கென ஒரு நிரந்தர இடத்தையும் பிடித்து ஆட்சி செய்து வருகிறார்.
நடிகை பூஜாவு ஹெக்டே இப்போதும் தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார் அதிலும் குறிப்பாக சிரஞ்சீவி , மகேஷ்பாபு போன்ற தெலுங்கு டாப் நடிகர்களுடன் நடித்து வருவதால் இவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது அதன் காரணமாகவே என்னவோ மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிகின்றன.
அந்தவகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை பூஜா ஹெக்டே தமிழில் நடித்துள்ளார் அதிலும் குறிப்பாக தளபதி விஜயுடன் அவர் நடித்து மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. விஜயுடன், பூஜா ஹெக்டே இணைந்து நடித்துவரும் திரைப்படம் பீஸ்ட் இந்தப் படத்தை நெல்சன் திலீப் குமார் வேற ஒரு தளத்தில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடித்ததற்காக சுமார் 3.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது தெலுங்கில் 2 கோடி சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த பூஜா ஹெக்டே தளபதி விஜயுடன் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சுமார் 3.5 கோடி சம்பளம் வாங்கியது தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.