திருநங்கை வேடமணிந்து விஜய் சேதுபதி நடித்த “சூப்பர் டீலக்ஸ்” படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

vijay sethupathy
vijay sethupathy

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் ஹீரோ, வில்லனாக நடித்து மக்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடித்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிய அசத்தி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால் வெற்றிக்கனியை தொடர்ந்து பெற்று வருகிறார்.

மேலும் மக்களுக்கும் இவரது நடிப்பு பிடித்து போனதால் தற்போது அடுத்த அடுத்த லெவலுக்கு உயர்ந்து கொண்டே இருக்கிறார் இப்பொழுதுகூட நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் உடன் கைகோர்த்துள்ள ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அந்த டிரைவர் கூட அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதனை தொடர்ந்து இந்த படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம்.

இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் ஷில்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் தற்போது சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்தும் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படத்திற்காக அவர் சுமார் 3 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது விஜய் சேதுபதி மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயர்ந்து உள்ளதால் இன்னும் பல கோடி சம்பளத்தை அதிகமாக உயர்த்தி வழங்கி வருகிறார்.