நடிகர் சூர்யா சினிமா உலகில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கிறார் இருப்பினும் அவரது ஒரு சில படங்கள் தொடர் தோல்விகளை சந்திக்கிறார் அதிலிருந்து மீண்டுவர தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது படங்கள் தொடர் தோல்வியில் இருந்து வந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் அதை மீட்டெடுத்து அதன்பின் சிறப்பான இயக்குனர்களிடம் கதை கேட்டு நடித்து வருகிறார் அந்த வகையில் சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து இவர் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வாடிவாசல் திரைப்படத்தில் வெற்றிமாறன் இணையவுள்ளார் மேலும் சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் பண்ண இருக்கிறார்.
இருக்கின்ற நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 75% கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு வெகு விரைவிலேயே முடித்துவிட்டு பொங்கலுக்கு வர இருப்பதாக அண்மையில் தகவல்கள் தீயாய் பரவி வந்த நிலையில் அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் உண்மையான விஷயத்தை தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
ஆம் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இச்செய்தி தற்பொழுது பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் இந்த திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு ஒரு வெற்றி படமாக மாற வேண்டும் எனவும் ரசிகர்கள் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.