“ஜெயிலர்” படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா.? சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு வந்த நல்ல செய்தி.!

இளம் இயக்குனர் நெல்சன் சிவகார்த்திகேயன், விஜய் ஆகியோர்களை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இது 169 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த படத்தை சிறப்பாக கொண்டு செல்ல இயக்குனர் நெல்சன் சிறப்பாக கதை எழுதி உள்ளதாக..

நெல்சனின் நெருங்கிய வட்டாரத்தில் இருக்கும் பலரும் கூறி வருகின்றனர். இதனால் ரஜினி பயப்படாமல் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் கை ஒரு ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன், ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு போன்றவர்கள் நடிக்கிறார்கள் என தெரியவருகிறது.

மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் வருகின்ற ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என கூறப்படுகிறது இதற்கான வேலைகளில் தான் தற்போது ரஜினி மற்றும் படக்குழு இறங்கியுள்ளதாக தகவல்கள் தகவல்கள் வெளிவருகின்றன.

ரஜினி தனது 169 திரைப்படத்தில் நடிக்க மட்டுமே மிகப் பெரிய ஒரு தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறாராம். இந்த படத்தில் ரஜினிக்கு சம்பளமாக சுமார் 151 கோடி கொடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினியின் 169 திரைப்படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வந்த நிலையில் அதற்கான தகவலும் கிடைத்துள்ளது அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு தான் ரஜினியை 169 படம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

Exit mobile version