சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி எப்பொழுது தெரியுமா.!

0

சிவகார்த்திகேயன் நடித்த எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருக்கும். இவர் நடிப்பில் எந்த படங்கள் வெளியானாலும் இவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

இவர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து தற்போது இவர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த தகவல் என்னவென்றால் வரும் கிறிஸ்துமஸ் அன்று இந்த படம் வெளியிடப்படுவதாக படக்குழுவினர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால் தீபாவளியை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்ட போஸ்டரில் படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில்தான் வெளியாகும் என்று படக்குழுவினர்கள் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும் இந்தப் படம் சீக்கிரம் வெளியாகுமா என்று பார்த்து வருகிறார்கள்.