பா. ரஞ்சித் படத்தை தவிர்க்கும் இளையராஜா, ஏ ஆர் ரகுமான் என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளவர் பா ரஞ்சித். இவர் முதலில் அட்டகத்தி அதன்பின் மெட்ராஸ் ரஜினியை வைத்து காலா, கபாலி என அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை இயக்கி அசத்தினார்.

பா ரஞ்சித் இதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த ரஞ்சித் சிறு இடைவெளிக்கு பிறகு ஆர்யாவை வைத்து குத்துச்சண்டை படமான சார்பட்டா பரம்பரை படத்தை எடுத்தார் இந்த படம் திரையரங்கில் வெளியாகாமல் மாறுதலாக OTT தளத்தில் வெளியாகியது படம் சிறப்பாக இருந்த காரணத்தினால் OTT தளத்தில் நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தியது.

இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து சந்தோஷமாக தனது அடுத்த படமான நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார். ரஞ்சித் இயக்கும் பெரும்பாலான படங்களில் சாதியைப் பற்றிப் பேசுவது வழக்கம் அதே சமயம் பொது மேடைகளிலும் சாதி குறித்து ஒரு தரப்பினருக்கு ஆதரவாகவும் என இரண்டு விதமாகவும் தான் பேசி வருகிறார்.

இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் முதலில் இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க இருந்ததாக தகவல் வெளியானது ஆனால் திடீரென அந்த படத்தில் இருந்து வெளியேறினார் அதன்பின்னர் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க வைக்க பா ரஞ்சித் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால் ஏ ஆர் ரகுமான் இயக்குனர் பா. ரஞ்சித் படத்தில் பணியாற்ற மறுத்தார் ஆர் ரகுமான். சாதி படங்களை எடுக்கும் இயக்குனர்கள் படங்களில் இசை அமைக்க மறுத்து வருகிறார் அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் முத்தையா, பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் படங்களில் பணியாற்றுவதை தவிர்த்து வருகிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகும் ஒரு புதிய படத்திற்காக மட்டுமே ஆர் ரகுமான் இசையமைக்க  ஒப்புக்கொண்டார் அதுவும் உதயநிதிகாக மட்டுமே இந்த படத்தில் அவர் பணியாற்றிய காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Comment