வெங்கட் பிரபு என் மூஞ்சிலேயே முழிக்க கூடாது.! அஜித்தின் உச்சகட்ட கோபத்திற்கு என்ன காரணம் தெரியுமா.?

ajith-venkat-prabhu
ajith-venkat-prabhu

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் மங்காத்தா இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது 2011ம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து அர்ஜுன், திரிஷா, லட்சுமி ராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், மஹத், பிரேம்ஜி அஸ்வின் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தார்கள்.  இந்த திரைப்படத்தின் மூலம் அஜத்துடன் மிகவும் நெருங்கி பழக வெங்கட் பிரபு அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்திற்கு மிகப் பிடித்தமான இயக்குனரானார் வெங்கட் பிரபு. பொதுவாக அஜித் தனக்கு பிடித்த இயக்குனருடன் அடுத்தடுத்து தொடர்ந்து அவர்களின் படங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களுக்கு மட்டும் இதுவரை அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை அதற்கு என்ன காரணம் என்று சில தகவல்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் சில மாதங்களுக்கு முன்பு பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் வெங்கட் பிரபு தெலுங்கு திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார் அதன் பிறகு அஜித் மற்றும் விஜய் இருவரையும் வைத்து மிகப்பெரிய பான் இந்தியா திரைப்படம் ஒன்றை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக கங்கை அமரன் பேட்டியில் கூறினார் ஆனால் இந்த தகவல் சினிமா பிரபலங்களுக்கிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஆனால் உண்மையில் அஜித் மற்றும் விஜய் இருவரும் இணைந்து படம் நடிக்க இருப்பதாக கங்கை அமரன் கூறியது உண்மையில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமில்லாமல் மீடியா பப்ளிசிட்டிக்காக தான் போற போக்கில் அடித்து விட்டு சென்று விட்டார் எனவும் பலரும் கூறினார்கள். இது மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது அதனால் அஜித் மிகவும் தர்ம சங்கடத்திற்கு ஆளானார் அதுமட்டுமில்லாமல் அஜித் வெங்கட் பிரபு மீது அதிக கோபத்தை  ஏற்படுத்தியது.

இந்த நிலையில் மங்காத்தா 2 திரைப்படத்தை வெங்கட் பிரபு எடுக்க இருப்பதாகவும் அதில் அஜித் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது இதையும் வெங்கட் பிரபு தான் கூறினார். இந்த தகவல் எப்படியோ அஜித்தின் காதிற்கு சென்றது. பொதுவாக அஜித் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகும் வரை இயக்குனராக இருந்தாலும் தயாரிப்பாளராக இருந்தாலும் எந்த ஒரு தகவலையும்  வெளியில் கூறக்கூடாது என்பதை அஜித் பின்பற்றி வருவார்.

ஆனால் சமீப காலமாக வெங்கட் பிரபுவின் நடவடிக்கை அஜித்துக்கு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமீபத்தில் அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் அவர்களை தூக்கிவிட்டு வேறு ஒரு பிரபல இயக்குனரை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது அந்த இடத்தில் வெங்கட் பிரபு இருந்தார் அதற்கு காரணம் லைக்கா நிறுவனத்தில் மேனேஜர்களில் ஒருவர் சுப்பு என்பவர் வெங்கட் பிரபு அவர்களை சிபாரிசு செய்தார் ஆனால் அஜித் அதற்கு வேண்டாம் என மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வெங்கட் பிரபு இதுபோல் செயல்களால் தான் அஜித் அவருக்கு பட வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார் என சினிமா வட்டாரத்தில் இருந்து கூறுகிறார்கள்.