ரஜினி படத்தை உதறி தள்ளிய ஜெயலலிதா காரணம் என்ன தெரியுமா.? இந்தப் புகைப்படம் தான்.!

late cm jayalalitha letter: தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் தற்போது பல படங்கள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் 1980ஆம் ஆண்டு வெளியான பில்லா என்ற திரைப்படம் அந்த காலத்திலேயே ரசிகர்களின் இடையே மிகவும் பிரபலமடைந்தது.

அந்த திரைப்படத்தை ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருந்தார். இந்த திரைபடத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீபிரியா மற்றும் பல நட்சத்திரங்கள்  நடித்திருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து அந்த படத்தில் இருந்து ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளன. அந்த தகவல் என்னவென்றால் ரஜினிக்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான். ஜெயலலிதா அந்த காலத்திலேயே நிறைய படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்தவர். இவர் படத்தில் மிகவும் அழகாக நடனம் ஆடுபவர்.

இதன்மூலமாகவே பல கோடி ரசிகர்களை கவர்ந்திருந்தார் அதனை வைத்து அவர் அரசியலுக்கு சென்றுவிட்டார். அதனைத்தொடர்ந்து பத்திரிக்கையில் படவாய்ப்புகள் எதுவும் இன்றி இவர் அரசியலுக்கு சென்றார் என ஒரு எழுத்தாளர் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

அந்த எழுத்தாளருக்கு பதிலளிக்கும் வகையில் ஜெயலலிதா ஒரு கடிதத்தை  எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் ரஜினி படத்தில் கூட முதலில் கதாநாயகியாக நடிக்க இயக்குனர் என்னை அணுகினார் ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க மறுத்தேன் என்றும் கூறியிருந்தார். இதனை அடுத்து அந்த கடிதத்தின் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி மிகவும் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டே வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

jayalalitha
jayalalitha

Leave a Comment