DD என்கின்ற திவ்யதர்ஷினி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? சொன்ன ஆச்சரியப்படுவிங்க..

சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் இளம் வயதிலேயே தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி  சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி முதன்முதலில் அறிமுகம் ஆனவர். பின்பு காபி வித் டிடி என்னும் சூப்பர் ஹிட்  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் சினிமா பிரபலங்கள் பலரிடமும் பழக்கமாகினார். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்று  டிடியும் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். மேலும் இவர் பல நிகழ்ச்சிகளில் ஜட்ஜாகவும் மற்றும் மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.

அதில் எங்கிட்ட மோதாதே என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து 2 சீசனாக தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிகழ்ச்சியும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் சிறந்த தொகுப்பாளினி என்பதற்காக பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார்.தற்போது இவர் விஜய் டிவியில் தொடர்ந்து பணியாற்றவில்லை.

என்றாலும் ஒரு சில முக்கிய நிகழ்வுகளை இவரை வைத்துதான்  தொகுத்து வழங்கி வருகின்றனர். கடைசியாக இவர் விஜய் தொலைக்காட்சியில் நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படம் ஹாட்ஸ்டார்யில் வெளியாகி இருந்ததை அடுத்து நயன்தாராவுடன் டிடி ஒரு உரையாடலை மேற்கொண்டார்.

டிடி தற்போது வெளிநாடுகளில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மேலும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வபோது இணையதளத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் தொகுப்பாளினி டிடி ஒரு நிகழ்ச்சிக்கு வாங்கும் சம்பளம் குறித்து தகவல் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இவர் ஒரு நிகழ்ச்சிக்கு 3 லட்சம் சம்பளமாக வாங்குவதாக தகவல் வெளியாகின இதனைக் கண்டு ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Comment