இளம் இயக்குனர்களுக்கு சிவகார்த்திகேயன் போட்ட புதிய கண்டிஷன்.? அப்போ இந்த காட்சியை நாம் படத்தில் பார்க்க முடியாதா.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு யார் வேணாலும் நடிக்க வரலாம் ஆனால் திறமை மட்டும் இருக்க வேண்டும் என்பதை நிரூபித்தவர் தான் சிவகார்த்திகேயன் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வெள்ளித்திரையில் காமெடியனாக நடிக்க களமிறங்கினார்.

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இவர் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அது மட்டுமல்லாமல் தற்போது இவரது நடிப்பில் அயலான்,டாக்டர் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

ஒரு சில திரைப்படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது என்று கூட கூறலாம் மேலும் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப் பட்டாலும் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களிடம் கதை கேட்க ஆர்வமாக இருக்கிறாராம்.

அந்த வகையில் அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களுக்கு இவர் ஒரு கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம் ஆம் சிவகார்த்திகேயன் எனது திரைப்படத்தில் இனிமேல் எந்த ஒரு புகைப்பிடிப்பது அல்லது மதுபானத்தை குடிப்பதோ போன்ற காட்சிகள் இருக்கக் கூடாது ஆனால் சிவகார்த்திகேயனின் டாஸ்மார்க் காட்சி என்றால் ரசிகர்கள் மிக ஆவலுடன் பார்ப்பார்கள்.

sivakarthikeyan4
sivakarthikeyan4

இதனைத் தொடர்ந்து இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இனிமேல் உங்களது அந்த காட்சியையும் பார்க்க முடியாதா என சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் நிஜமாலுமே இந்த காட்சிகள் வராதா என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருவது மட்டுமல்லாமல் உங்கள் திரைப்படத்தில் இந்த காட்சிகளில் நடித்தால் தான் உங்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment