ரசிகர்களின் ஃபேவரைட் இசையமைப்பாளர் “அனிருத்” சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.?

சினிமாவில் ஒரு படம் ஹிட் அடிக்க அந்த படத்தின் திரைகதை, நடிகர், நடிகைகள் போன்றவர்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோல படத்தின் பாடல்களும் முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போது தமிழ் சினிமாவில் பல இளம் நடிகர்கள் வளர்ந்து வருகின்றனர். அதேபோல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் போன்ற அனைத்து துறையிலுமே பல்வேறு  பிரபலங்கள் வளர்ந்து கூடிய விரைவிலேயே கொடிகட்டி பறக்கின்றனர்.

அந்த வகையில் தனது இளம் வயதிலேயே இசையமைப்பாளராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கியவர் அனிருத். இவர் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மூணு திரைப்படத்தில் இசையமைத்து அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது பாடல்கள் மக்கள் மற்றும் ரசிகர்கள் புகழும் படி இருந்தது அந்த பாடல்களும் வெளிவந்து பெரிய அளவு சாதனை படைத்தது.

மூணு படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து அனிருத் உடனடியாக தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் சிவகார்த்திகேயன், அஜித், விஜய், ரஜினி போன்ற டாப் ஹீரோகளின் படங்களில் சிறப்பான பாடல்களை பாடியும் மற்றும் இசையமைத்தும் வெற்றி கண்டு வருகிறார். கடைசியாக வெளிவந்த டாப் நடிகர்களின் படங்களான விஜயின் பீஸ்ட், சிவகார்த்திகேயனின் டான் போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அண்மையில் கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்திற்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அண்மைக்காலமாக சினிமா பிரபலங்கள் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

அதன்படி தற்போதை இசையமைப்பாளர் அனிருத் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்த தகவலும் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் இசையமைப்பாளர் அனிருத்தின் சொத்து மதிப்பு சுமார் 81.7 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரியவில்லை ஆனால் சமூக வலைதள பக்கங்களில் இந்த செய்தி வெளியாகி தற்போது வைரல் ஆகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version