“பீஸ்ட்” படத்தில் பூஜா ஹெக்டேவின் பெயர் என்ன தெரியுமா.. அவரே சொன்ன சுவாரசிய தகவல்.

தளபதி விஜய் இப்பொழுது தனது 65 வதுபடமான பீஸ்ட் திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார் படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி கோலாகலமாக உலக அளவில் வெளியாக இருக்கிறது. தமிழை தாண்டி பல மொழிகளில் பீஸ்ட் திரைப்படம் வெளிவர உள்ளது.

இதுவரை இந்த இந்தப் படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்டுகள் அனைத்தும் வேற லெவெலில் இருந்து வந்துள்ளதால் ரசிகர்களின் தாண்டிய மக்களும் இந்த படத்தை பார்க்க பெரிய அளவில் காத்துக்கொண்டிருக்கின்றனர் இப்பொழுது டிக்கெட் முன்பதிவு வெளியிட்டுள்ளதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் முட்டி மோதிக்கொண்டு டிக்கெட்டை புக் செய்து வருகின்றனர்.

இதில் மட்டுமே மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் பீஸ்ட் படக்குழு புரமோஷன் வேலைகளில் மிக தீவிரமாக இறங்கி உள்ளது இந்த படத்தில் நடித்த நடிகர்-நடிகைகள் மற்றும் இயக்குனர்கள் பல்வேறு பேட்டிகள் கொடுத்து  பேசிவருகின்றனர் அண்மையில் கூட யோகி பாபு இந்தப் படம் குறித்து பேசிய செய்தியை இணையதளத்தில் பெரிய அளவில் வைரலானது.

அவர் சொன்னது வழக்கம் போல விஜய்யின் படங்கள் எப்படி தாறுமாறாக இருக்குமோ அதே போல இந்த படமும் நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்கும். படத்தைப் பற்றி வேறு அளவுகளில் பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே, நெல்சன் போன்றவரும் பீஸ்ட் மற்றும் விஜய்யும் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களை தொடர்பு கொண்டு அவர்கள் கேள்விக்கும் பதில் கொடுத்து வருகிறார் அப்படியே ரசிகர் ஒருவர் பீஸ்ட் படத்தில் உங்களுடைய கதாபாத்திரத்தின் பெயர் என்ன என கேட்டுள்ளார் அதற்கு அவர் சற்றும் யோசிக்காமல் இந்த படத்தில் என்னுடைய பெயர் ப்ரீத்தி அந்த கதா பாத்திரம் நிச்சயம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என சொல்லி உள்ளார்.

Leave a Comment