புகழை ரிஜெக்ட் செய்த விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சி எது தெரியுமா.?

சின்னத்திரையில் சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நடந்து முடிந்த நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பலரும் பங்குபெற்று ஒவ்வொரு டாஸ்கிலும் வெற்றி பெற்று வந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே தனது முகத்தை பதிய வைத்து தற்பொழுது நிறைய திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் ஒரு முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் புகழ் இவர் இதற்கு முன்பு இதே விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றாலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார்.

அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது சின்ன சின்ன விளம்பர படங்களிலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து புகழ் முதன் முதலில் விஜய் டிவியில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சிகளில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி தான் கலக்கப்போவது யாரு சீசன் 5 இதில் புகழ் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபெற்று உள்ளாராம்.

ஆனால் இவரை நடுவர்கள் ரிஜெக்ட் செய்துள்ளனர் என தற்போது தகவல் கிடைத்துள்ளது மேலும் இவர் கலக்கப்போவது யாரு சீசன் 5யில் கலந்துகொண்ட காட்சியின் புகைப்படங்கள் கூட தற்போது வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் எதற்காக புகழை ரிஜெக்ட் செய்தார்கள் என பல கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகிறார்கள்.

pukazh
pukazh

ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தில் புகழ் பார்ப்பதற்கு நல்ல வேடம் தானே போட்டுள்ளார் பின்பு எதற்காக ரிஜெக்ட் செய்தீர்கள் பல பொதுமக்களும் சமூக வலைதளப் பக்கங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment