மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த மூன்று திரைப்படங்கள் என்ன தெரியுமா..

திரை உலகில் அமைதியாக இருந்து கொண்டு சத்தமில்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கருத்துக்களை எடுத்துக்கூறி தனக்கென ஒரு ஸ்டைலில் வலம் வந்தவர் நடிகர் விவேக்.இவர் நேற்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். விவேக்கின் உடலுக்கு 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்தது.

மேலும் மக்கள் விவேக் அவர்களின் இறுதி அஞ்சலிக்காக ரசிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் ஒன்று கூடி   அஞ்சலி செலுத்தினர். இது ஒரு பக்கம் இருந்தாலும் அவரது இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் ரசிகர்களும் பிரபலங்களும் தனது சமூக வலைதளத்தின் மூலம் தனது அன்பை காட்டி வருகின்றனர்.

நடிகர் விவேக் கடைசியாக ஹரிஷ் கல்யாண் இணைந்து தாராள பிரபு என்ற திரைப்படத்தில் டாக்டராக நடித்து மக்களின் வரவேற்பை பெற்றார் அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். அந்த லிஸ்ட் இப்போது பார்போம்.

நடிகர் விவேக் விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதில் விவேக்கின் கதாபாத்திரமும் எப்படி இருக்கும் என பலரும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கின்றனர் மேலும் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடந்து கொண்டு வருகிறது.

இதற்கு அடுத்ததாக சரவணா ஸ்டோர் சரவணன்அருள் நடிக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் ஹீரோவுக்கு துணையாக படம் புல்லா நடித்துள்ளதாக கூறப்படுகிறது திரைப்படமும் ஒரு ஹிட் படமாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து கமலுடன் இந்தியன் 2 என்ற திரைப்படத்தில் நடிக்க இருந்தார் ஆனால் இப்படத்தின் ஷூட்டிங் பாதி முடிந்த நிலையில் மீதி சூட்டிங் சிலபிரச்சனைகள் காரணமாக தற்போது எடுக்க முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதிலும் அவர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை அழகான எதிர்பார்க்கும் வேற லெவல் இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment