ரஜினிக்காக எழுதப்பட்ட கதையில் அஜித் நடித்து ஹிட் அடித்த திரைப்படம் எது தெரியுமா.?

சினிமா உலகில் நடக்கின்ற நடிகர்கள் எப்பொழுதும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க ஆசை படுவது வழக்கம் அந்த வகையில் பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருக்கும் ரஜினி மற்றவர்களுக்கு அந்த இடத்தை விட்டுத் தராமல் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து இப்பொழுதும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார்.

கடந்த தீபாவளி அன்று கூட இவர் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் திரையரங்கில் கோலாகலமாக வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்த திரைப்படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

ஆனால் இதுவரை யார் அந்த இயக்குனர் எந்த தயாரிப்பு நிறுவனத்தில் இவர் நடிக்க போகிறார் என்பது தெரிய வராமல் இருக்கிறது.  இப்படிப்பட்ட நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருந்தாலும் ஒரு சில கதைகளை நிராகரித்தும், நக்கமாலும் இருந்து உள்ளார்.

மேலும் ரஜினி தவிர்த்த படத்தை வேறு ஒருவர் நடித்து ஹிட் கொடுத்ததும் உண்டு  இதுவரை ரஜினியை வைத்து பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து கொண்டு ஒரு தடவை கே எஸ் ரவிக்குமார் ரஜினிக்காக ஒரு கதையை பார்த்து பார்த்து எழுதி உள்ளார் ஆனால் கடைசியில் சில காரணங்களால் ரஜினி.

அந்த படத்தில் நடிக்காமல் போக பின் அந்த பட வாய்ப்பு கை மாறியதாம் அந்த படம் வேறு எதுவும் இல்ல “வில்லன்” படம் தானாம்.  ரஜினி கைவிடவே அஜித் இரட்டை கதாபாத்திரங்களில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி இப்படத்தின் கதைக்கு உயிர் சேர்த்தார் மேலும் இந்த திரைப்படம் அஜித் கேரியரில் ஒரு பெஸ்ட் படமாக அமைந்தது.

Leave a Comment