யுவன்சங்கர் ராஜா “வலிமை” திரைப்படத்திற்காக வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா இளம் வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது வரையிலும் பல்வேறு படங்களுக்கு இசையமைத்து தனது திறமையை வெளிக்காட்டி வலம் வருகிறார் அவர் முதலில் கமல் படமான வெற்றி திரைப்படத்திற்கு இசை அமைத்து தனது திறமையை வெளி உலகிற்கு  அறிமுகப்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இவர் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், சிம்பு போன்ற டாப் நடிகர்கள் படங்களுக்கு இசை அமைத்து தற்போது ஓடிக்கொண்டிருக்கிறார். இப்போகூட நடிகர் அஜித்துடன் கைகோர்த்து வலிமை படத்தில் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், glimpse வீடியோ, மேகிங் வீடியோ, நாங்க வேற மாதிரி பாடல்.

அம்மா பாடல், விசில் தீம் மியூசிக் என வெளிவந்த அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. யுவன் சங்கர் ராஜா படத்தின் தீம் மியூசிக் கேட்டக்கவே ஒரு மக்கள் கூட்டம் அலை மோதுவதால் அதுவும் அஜித் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளர் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மத்தியில் உச்சத்தில் இருக்கின்றது.

யுவன் சங்கர் ராஜாவுக்கு அஜித்தை ரொம்ப பிடிக்கும் என்பதால் கடினமாக உழைத்து வருகிறார். இப்படத்தின் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நகர்ந்துகொண்டிருக்கிறது அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் யுவன்சங்கர்ராஜா வலிமை படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி பார்க்கையில் யுவன்-ஷங்கர்-ராஜா இந்த திரைப்படத்திற்கு மட்டும் சுமார் 1.25 கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தெரியவருகிறது. இவரது திறமைக்கு இந்த சம்பளம் சரியான ஒன்று என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment