பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டா வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.! ஆத்தாடி இவ்வளவு என அதிர்ச்சியாகும் சக போட்டியாளர்கள்

பிக் பாஸ் ஆறாவது சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது இந்த ஆறாவது சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள் அவர்களில் பல போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்கள் அதாவது ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு போட்டியாளர்கள் எலிமினேஷன் லிஸ்ட் செலக்ட் செய்யப்பட்டு வெளியே செல்கிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ஐந்து சீசன்ங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த சீசனும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் சாதாரண மனிதர்கள் கூட கலந்து கொண்டார்கள் சமூக வலைதளத்தில் மிகவும் ட்ரெண்டான ஜி பி முத்து அவர்களும் இந்த சீசனில் கலந்து கொண்டார்.

மேலும் இந்த சீசனில் ஐஸ்வர்யாவின் அண்ணன் மற்றும் சீரியல் நடிகரான மணிகண்டன் ராஜேஷ் என்பவரும் கலந்து கொண்டார் இவர் கிட்டத்தட்ட நன்றாக தான் விளையாடி வந்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு அவள் என்ற தொடரில் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு என பல சீரியல்களில் நடித்தார்.

சீரியலில் மிகவும் பிரபலமடைந்த மணிகண்டா தன்னுடைய மனைவியுடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் என்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளிளும் பங்கேற்றார். அதன் பிறகு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நன்றாக விளையாடி வந்த மணிகண்டன்  கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பிக் பாஸ் வீட்டில் இதுவரை மணிகண்டா இருந்த நாள் வரை ஒரு நாளைக்கு 18000 முதல் 20 ஆயிரம் வரை சம்பளமாக பேசப்பட்டு தான் உள்ளே நுழைந்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இவர் பல லட்சங்களை சம்பளமாக மொத்தமாக பெற்று இருப்பார் என தகவல் கிடைத்துள்ளது.

Leave a Comment