லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அண்ணாத்த படத்திற்காக வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? வெளியான தகவல்.

சினிமா உலகில் ஒரு நடிகை ஆரம்பத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் டாப் படங்களிலேயே நடிப்பது பெரிய விஷயம் ஆனால் அதை சரியாக செய்து அசத்தி வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் ஆரம்பத்தில் சரத்குமாருடன் ஐயா திரைப்படத்தில் நடித்து அசத்தினார். அந்த படமே இவருக்கு பெரும் பெயரைப் பெற்றுத் தந்ததால் அடுத்தடுத்த டாப் நடிகர்களுடன் கைகோர்த்தார்.

மேலும் ஆள் பார்ப்பதற்கு செம சூப்பராக இருந்ததால் தயாரிப்பாளர்களும் இயக்குனர் மற்றும் நடிகர்களும் இவரே வேண்டுமென ஒற்றைக்காலில் நின்றனர்.இப்படி தமிழில் ஓடிக்கொண்டிருந்ததை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் டாப் நடிகர்களுடன் கைகோர்த்ததால் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக விஸ்வரூபம் எடுத்தார்.

நயன்தாரா தற்போது பெரிதும் தமிழிலேயே அதிக டாப் நடிகர்களுடன் கைகொடுத்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் அஜித் விஜய்யுடன் கை கோர்த்த நிலையில் தற்பொழுது ரஜினியுடன் கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் சிறுத்தை சிவா எடுத்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக இவர் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தில் இவருடன் கைகொடுத்து மீனா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு போன்ற பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து அசத்தியுள்ளனர் போதாத குறைக்கு பிரகாஷ்ராஜ், ஜெகபதிபாபு ,அபிமன்யு சிங் போன்றவரும் வில்லன்களாக நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை நயன்தாரா அண்ணாத்த திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்திற்கு நடிகை நயன்தாரா வாங்கிய சம்பளம் 5 கோடி என கூறப்படுகிறது. அண்ணாத்த படம் ஹிட் அடித்ததால் நயன்தாரா சம்பளத்தை இன்னும் ஏற்றினாலும் ஏற்றுவார் என ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Comment