வலிமை படத்தில் அற்புதமாக ரெடி ஆகி இருக்கும் நான்கு பாடல்கள் அதுவும் எந்த ரகத்தில் தெரியுமா.?

0

தமிழ் சினிமாவுலகில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தல அஜித் இவர் நேர்கொண்ட பார்வை,விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தற்போது வலிமை என்ற திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் தல அஜித் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உதவி என்றால் உடனே யோசிக்காமல் செய்பவர் என்று கூட கூறலாம்

அதுமட்டுமல்லாமல் எந்தப் பெண் வந்தாலும் எழுந்து நின்று மரியாதை செலுத்திவிட்டு தான் அமர்வார் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான் இந்நிலையில் படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வலிமை பஸ்ட் லூக் வருகின்ற மே ஒன்றாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை மிக வேகமாக அதிகரித்து வருவதால் தல அஜித் ரசிகர்களின் உடல் நலம் பற்றி ஃபர்ஸ்ட் லுக்கை தள்ளி வைத்துவிட்டார். தல அஜித் ஃபர்ஸ்ட் லுக்கை தள்ளி வைத்தாலும் ரசிகர்கள் பலரும் அஜித்திற்கு ஆதரவு தருகிறார்கள்.

இதனையடுத்து இந்த திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் இந்நிலையில் இவரது இசையில் நான்கு பாடல்கள் அருமையாக வந்துள்ளதாம் விஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே சூப்பர் ஹிட் ஆனது அதே போல் இந்த படத்தில் நான்கு மெலடி பாடல்கள் அருமையாக வந்துள்ளது என சினிமா வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது.

Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் பாடல்கள் ஹிட்டாகுமா என கேட்டு வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த தகவல் அதிகாரபூர்வ தகவலா என குழப்பத்தில் இருக்கிறார்கள் ஆனால் இது அதிகாரப்பூர்வ தகவல் என்பதா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.