நடிகர் சூர்யா காதல் மனைவி ஜோதிகாவுக்கு முதலில் வாங்கி கொடுத்த பரிசு என்ன தெரியுமா.? பல வருடம் கழிந்து வெளிவந்த தகவல்.

சினிமா உலகைப் பொறுத்தவரை காதல் வயப்படுவது வழக்கம் ஆனால் அந்த காதல் நீண்ட தூரம் பயணிக்கும் போது பெரிய விஷயம் அதுவும் சிறப்பாக அமைந்து விட்டால்   ஒருகட்டத்தில் திருமணத்தில் முடியும். அந்த வாழ்க்கையை நீண்ட தூரம் எடுத்துக்கொண்டு ஒன்றாக சேர்ந்து வாழ்வது இப்போதைய காலகட்டத்தில் மிக அரிதான ஒரு விஷயமாக மாறியுள்ளது.

இப்போது இருக்கும் இளம் தலைமுறை பிரபலங்கள் பலரும் சினிமா படங்களில் நடிக்கும்போது காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டாலும் வாழ்க்கையில் தோற்று விடுகின்றனர். ஆனால்  20 வருடத்திற்கு முன்பு சினிமா உலகில் நடித்த பிரபலங்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்கின்றனர்.

அந்த லிஸ்டில் அஜித் –  ஷாலினி, சூர்யா – ஜோதிகா போன்றவர்கள் லிஸ்டில் இருக்கின்றனர் இப்பொழுது நாம் சூர்யா ஜோதிகாவை பற்றி பார்க்க உள்ளோம். சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளனர் அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், சில்லுனு ஒரு காதல், உயிரில் கலந்தது போன்ற..

பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடிக்கொண்டிருக்கும் போதே காதலித்து பின் திருமணம் செய்து கொண்டனர் இந்த நிலையில் நடிகர் சூர்யா – ஜோதிகாவிற்கு முதலில் வாங்கி கொடுத்த பரிசு என்ன என்பது குறித்து தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் சூர்யா அவரது மனைவி ஜோதிகாவுக்கு முதலில் வாங்கி கொடுத்த பரிசு பிளாட்டினம் ஜெயின் மற்றும் கொலுசு தான் என்று கூறியுள்ளார் நடிகை ஜோதிகா.

Leave a Comment