நடிகர் சூர்யாவுக்கு முதன் முதலில் 100 கோடியைத் தொட்ட திரைப்படம் எது தெரியுமா.?

நடிகர் சூர்யா இப்பொழுது வேண்டுமானால் சினிமா உலகில் தொடர்ந்து பல பட வாய்ப்பு கிடைக்கையில் வைத்திருக்கலாம் ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அங்கு அப்பாவின் பெயரை பயன்படுத்தாமல் தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து போராடி ஒவ்வொரு படத்தையும் கைப்பற்றி தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டி படிப்படியாக முன்னேறினார்.

அந்த வகையில் இவர் ஆரம்பத்தில் படிப்படியாக நடித்த திரைப்படங்கள் சில சுமாரான வெற்றியை பெற்று இருந்தாலும் ஒரு கட்டத்தில் இவரது படங்கள் பாக்ஸ் ஆபீஸில் இடம்பிடித்தன இருப்பினும் 100 கோடி பட்ஜெட் படங்கள் இவரது லிஸ்டில் ரொம்ப கம்மி ஆகவே இருந்து வந்துள்ளன. சொல்லப்போனால் பல வருடங்கள் கழித்து ஏழாம் அறிவு திரைப்படம் தான் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக மாறியது.

மேலும் அந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்து அசத்தி இதுவே அவரது கேரியரில் முதல் 100 கோடியைத் தொட்ட திரைப்படமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு நிகராக பார்க்கப்பட்டவர்  நடிகர் சூர்யா என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகளால் அந்த இடத்தை அவர் நழுவ விட்டார்.

இருப்பினும் சமீபகாலமாக இவரது படங்கள் வெற்றி பெறுகின்றன அவர் கடைசியாக நடித்த சூரரைப்போற்று ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை ருசித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூட இவர் நடிப்பில் பல்வேறு படங்கள் இருக்கின்றன அதில் முதலாவதாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சூர்யா கேரியரில் 100 கோடியைத் தொட்ட திரைப்படங்கள் அதிகம் இல்லை என்றாலும் முதல் திரைப்படம் ஏழாம் அறிவு அதன்பின் சிங்கம் 2 ஆகிய திரைப்படங்கள் 100 கோடியைத் தொட்ட திரைப்படங்கள் லிஸ்டில் பார்க்கப்படுகிறது.

Leave a Comment