பிக்பாஸ் ஆரி, உதயநிதி ஸ்டாலின் இணைந்து நடிக்க போகும் படம் என்ன தெரியுமா.? தெரிஞ்ச ஷாக்கிவிடுவிங்கப்பா..

0

ஹிந்தியில் பல ரீமேக் படங்களை எடுத்து வெற்றி கண்டவர் தயாரிப்பாளர் போனி கபூர் இவர் தற்போது தமிழில் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் அடுத்ததாக ஹிந்தியில் மாபெரும் அளவில் ஹிட்டடித்த ஆர்டிகிள் 15 படத்தின் தென்னிந்திய உரிமத்தை போனிகபூர் கைப்பற்றினர் இந்த திரைப்படத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற கேள்வி மிகப்பெரிய அளவில் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்கப் போகிறார் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.

உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியல் களத்தை முடித்துவிட்டு தற்போது இந்த படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் பொள்ளாச்சியில் தற்போது எடுத்து வரப்படுகிறது ஆனால் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை இந்த திரைப்படத்தை அருண் காமராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் முதல் முறையாக பிக்பாஸ் ஆரி அர்ஜுனுடன் இணைந்து நடிக்கிறார் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் ஆரி நடிப்பில் தற்போது பகவான், அலோகா , எல்லாம் மேல இருக்கிறவன், போன்ற படங்கள் உருவாகி வருகிறது இப்போது இந்த படத்திலும் இணைந்து உள்ளதால் தமிழ் சினிமாவில் வலுவான ஒரு இடத்தை பிடிப்பார் என பலரும் எதிர்பார்க்கின்றனர் ஏனென்றால் அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளத்தையும் வைத்திருக்கிறார் ஆரி அர்ஜுனன்.