பெண் இயக்குனர் சுதா கொங்கராவுக்கு பிடித்த அஜித் படம் எது தெரியுமா.?

ajith-and-sudha kongara
ajith-and-sudha kongara

நடிகர் அஜித் 90 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் பல்வேறு விதமான படங்களில் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹச். வினோத்துடன் கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அடுத்த படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

வலிமை நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழு உடன் மீண்டும் இணைந்துள்ளார். படத்தின் பூஜையை மிக விரைவிலேயே போடப்பட்டு படத்தின் ஷூட்டிங் தொடங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிமை படம் பிரச்சனைகளை முடிந்த உடனேயே வெளிவந்துவிடும் அதற்காக  காத்திருக்காமல் அடுத்ததாக தீபாவளிக்கு தனது அடுத்த படத்தை கொடுக்க விரும்புவதாகவும்..

உடனடியாக அதற்கான வேலைகளை செய்ய ரெடியாக இருப்பதாகவும் தெரிய வருகின்றன. இந்த நிலையில் இயக்குனர்கள் பலரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேட்டி கொடுத்தனர் சுதா கொங்கரா இயக்குனர் வெங்கட்பிரபுவை புகழ்ந்து பேசி அசத்தினார் அவர் சொன்னது.

நான் மங்காத்தா படம் பார்த்து அசந்து விட்டேன் உடனே வெங்கட்பிரபுவுக்கு இரண்டு பக்கம் எழுதி மெசேஜ் அனுப்பினேன். அப்படி ஒரு வில்லத்தனம் இவரும் சொல்கிறார் அவரும் நடிக்கிறார் என கூறி உள்ளார். இதனை பார்த்த அஜித் ரசிகர்கள் தற்போது சமூக சந்தோஷத்தில் இருப்பதோடு இந்த செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்