நடிகர் விஜயுடன் நடித்த சங்கவி தற்பொழுது என்ன நிலைமையில் இருக்கிறார் தெரியுமா.? நீங்களே பார்த்தால் ரொம்ப ஆச்சரியப்படுவீங்க.!

90ன் காலத்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை சங்கவி இவர் தளபதி விஜயின் திரைப்படங்களில் அதிகமாக நடித்து மக்கள் மத்தியில் தலை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் பார்த்தால் இவரது இயற்பெயர் காவியா ரமேஷ் ஆனால் சினிமாவிற்காக தனது பெயரை சங்கவி என்று மாற்றிக்கொண்டார் தெலுங்கு,கன்னடம்,தமிழ் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து தனது 16-வது வயதிலேயே சினிமா உலகிற்கு நடிக்க வந்துவிட்டார்.

மேலும் தல அஜித் நடிப்பில் வெளியான அமராவதி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து ரஜினி,விஜய்,விஜயகாந்த்,கமல்,பிரபு,சத்யராஜ்,சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து விட்டார் அஜித்துடன் அமராவதி விஜயுடன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழில் தனக்கென ஒரு மார்க்கெட்டையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார்.

அந்த வகையில் பார்த்தால் விஜயுடன் இணைந்து இவர் மிகவும் கிசுகிசுக்கப்பட்டார் என்றுதான் கூறவேண்டும் பல நடிகைகளைப் போலவே இவருக்கும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஆரம்பித்தார் ஒரு கட்டத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டும் நடித்தார்.

இருந்தாலும் மீண்டும் தனது விடாமுயற்சியினால் கோகுலத்தில் சீதை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பின்பு பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இருந்த இவர் தனது 39 ஆவது வயதில் ஒரு ஐடி கம்பெனியின் ஓனருடன் சங்கவி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கடைசியாக அவருக்கு சமுத்திரகனி நடிப்பில் வெளியான கொளஞ்சி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

sangavi
sangavi

தற்போது 42 வயதில் பெண் குழந்தையைப் பெற்றுள்ளார் இந்நிலையில் அவரது குடும்ப புகைப்படம் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருவதால் பலரும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு இவரா என்று ஆச்சரியப்பட்டு இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment